Wednesday, September 14, 2011

http://www.flickr.com/photos/59732770@N08/

இதழ்கள்



என் முன் விழ்ந்தது!
பூவிதழ்கள் மட்டுமா?
பூவிதழாள் மனமுமா?
RASIGAI!

தங்க கோலம்!!



ஏழாம் அறிவின் வாசிப்பை கேளடி!
வார்த்தையா அவை!
ஏழு வண்ண வர்ணிப்படி
வானவில் ஜாலங்கள் அதனிடம்
வேண்டி நிற்க்கும் கோலங்கள்!
நேரில் கேட்க காலமில்லை
செவிவழி சிவக்க வரமுமில்லை
ஏழாம் அறிவின் வண்ண ஜாலம்
புள்ளிகள் இல்லா தங்க கோலம்!!

RASIGAI!



இமை நீயடி!



கண்ணின் இமை நீயடி
தந்தேன் எனை நானடி!
வெட்கம் ஏன் பாரடி!
என்னில் பாதி நீயடி!
உன்னால் தானேடீ
முனிவனான பின்பும் கூட
மனையாள துடிக்கிறேன்!!
RASIGAI!

இங்கே வாடா...



புஜ்ஜு குட்டி
சொஜ்ஜு குட்டி
செல்ல குட்டி
பல்லா குட்டி
பட்டு குட்டி
சிட்டு குட்டி
சக்கர குட்டி
என் நித்திலமே
இங்கே வாடா...
RASIGAI!

பாசம்!



பிரியமான தாய்
பதறிய தந்தை
அறியா குழந்தை
நீர் மூழ்கும் ஆவலில்!
RASIGAI!

அழகின் அழகு!!



ஹெய் ஹெய்!
பொன்வண்டே ஓடி போ!
நான் பூ அல்ல
பூவை போன்ற பாவை!
RASIGAI!

ஆபத்து!



விட்டுவிடு என்னை!
இரண்டுமே ஆபத்து!
பூமணம்,பூவை ம[ன]ணம்!
RASIGAI!

நிம்மதி!



பனங்கீற்றின் இசையும்
கருங்குயிலின் ஓசையும்
கானகத்தின் அமைதியும்
தனிமையே இனிமை என
நிம்மதி பெரும் இதயமும்!
RASIGAI!

பாணம்!



மைவிழியாள்,மலரடியாள்,
சீதாவை மணக்க இது
சாதா பாணம் எனக்கு!
RASIGAI!

பிஞ்சும் பஸ்மம்!



மயக்கியதால் கொடுத்தேன் தண்டனை!
இது பஞ்சணையால் வந்த வினை!
பிஞ்சும் பஸ்மம் ஆவதற்க்குள்
விலகி நில்,தூர செல் தொடராதே!
RASIGAI!

பத்திரம்!






அழகிய அன்னமே அமைதியின் சின்னமே!
என் பதிலை பத்திரமாக கொண்டு செல்
பரிதவிப்பை பக்குவமாக எடுத்து சொல்!!!
RASIGAI!

இன்னுமா எதிர்பார்ப்பு

வெற்றிலையில் தெரிபவன்!
விரைவில் இங்கு வருவான்!
RASIGAI!

முற்கள்!



நீவீர் முன் செல்க!
முற்கள் பட்டதென நிற்கிறேன்
கற்கள் எறிந்து கடைகண்
காட்டியவன் எங்கே???
RASIGAI!

லாலாலலலாலா

டேய் செல்லம்!
வேணாம்டா வம்பு
சொல்றத கேளு ஒழுங்க huggies
கட்டிக்கோ இல்லை காக்காக்கு
லாலாலாலாலா தான்!!!
RASIGAI!

எங்கே?



வைகை நேரமும் வந்தது!
சைகை செய்தவன் எங்கே?
RASIGAI!

Sunday, September 11, 2011

தனிமை!


முடியாத என் கதை!
இனி யாரும் என்று
யாரும் இல்லை!
RASIGAI!

பிரிவா? பரிவா?


கூட்டத்திலும் ஏன்
தவிப்பாக தனியாக!
அவன் பரிவினாலா?
அதன் பிரிவினாலா?
RASIGAI!

இல்லையடி என்னிடம்!!!!!!


உன்னிடம் நீ மயங்கிய
மடல் ஆவது உள்ளதடி!
இல்லையடி என்னிடம்
நான் மனம் தொலைத்த
அந்த முதல் வாழ்த்தும்!
RASIGAI!

நல்உதாரணங்கள்!


நன்மகனுக்கு ராம்!
நளினத்திற்கு சீதை!
நட்பிற்கு ஓர் குகன்!
உத்தமனுக்கு லக்குமன்!
RASIGAI!

ஈரம்!


கருக்கலில் இருந்து
இராக்காலம் வரை
கருங்கல் மேல் அமர்ந்து
கருங்கல் ஆனாள்
காத்திருந்து காத்திருந்து
காய்ந்தும் விட்டாள்!
கன்னங்களை நனைத்த
கண்களில் மட்டும் ஈரம்!
RASIGAI!

பூரிப்போடு!


என் கள்வனே!
மாய கண்ணனே!
குழல் இசைத்து
கானங்கள் நீ பாடு!
மாள்கிறேன் நான்
ரசித்து பூரிப்போடு!
RASIGAI!

Saturday, September 10, 2011

தங்க தாமரைகள்!


தங்க கதிர்களை
அள்ளி அளித்த
தங்க தாமரைகள்!
RASIGAI!

நீல மேகம்!


வெண்மேகம் கண்டேன்!
அட இது என்ன நீல மேகம்!
புரிந்தது அழகிய
நினைவுகளை சுமந்து
தூது செல்கிறதா?
RASIGAI!

வெண் தேவதைகள்!


இடையில் நிற்காமல்
வழுக்கி விழும் வெண்பட்டு அருவிகள் !
இடைவிடாமல் விழ்ந்தும்
நிரம்பாமல் போகின்ற பள்ளங்கள்!
பச்சை கொடி காட்டி
தென்றலுடன் கொஞ்சி விளையாடும்
வெண் தேவதைகள் !
தங்கி விட்டால் தளர்ந்து விடுவேன்
என ஓடும் நீல நதிகள்!
RASIGAI!

வெளுத்த நிறம்!


தங்கும் தங்க மஞ்சள்
மாறியதில் வந்த கண் நீர்???
விழி நீரால்
மீண்டும் வெளுக்குமா?
RASIGAI!

ஒரே நினைவு!


உள்ளத்தில் நிறைந்த
ஒரே நினைவு!
பத்திரமாக பாதுக்காப்பாக!
RASIGAI!

விட்டில் பூச்சி!


சூழ்ந்த மலரிடம்
சுகமணம் இல்லை
விட்டில் பூச்சியே
மயங்கி விழாதே!
வீழ்ந்தால் மடிவாய்!
RASIGAI!

பாலைவன வாழ்க்கை!


உள்ளக்குளத்தில் ஊறும்
வற்றாத கவலை நீரை
விழி வழியாக
குடம் குடமாக
ஏர் இறைத்தும்
வெடித்து போன நிலமாக
பாலைவன வாழ்க்கை
பசுமை இல்லாமல்
பார்த்து சிரிப்பதேன்
என்ன வழி?
இவ்விழி நீர் காய
என்ன வழி?
RASIGAI!

யார் இவள்!


இவள் இயற்கை
அன்னையின் இளவரசியா?
நிலமகளின் பேத்தியா?
RASIGAI!

நீல விழிகள்!


நனவுகளை வழி நடத்தி
நினைவுகளை மட்டுமே
தேக்கிய நீல விழிகள்!
RASIGAI!

சிருங்கார சிரிப்பு !


சிறு சிறு துளி பட்டு
சிவந்து விட்ட சிவப்பில்
சிருங்கார சிரிப்பு!!!
RASIGAI!

அகம்முகம் மலரு!


கவலை கொள்ளாதே
காற்றாய் பறக்கும் வேதனை!
நாம் கரைப்போம்
காலத்தின் சோதனையை!
ஏக்கங்கள் பறக்கும் பஞ்சாக
எண்ணம் நிறைவேறும் வரமாக!
வாழ்வோம் கரையா நினைவாக!
என்றும் நான் உன்
உள்ளத்தில் ஒளிரும் மதியாக!
எண்ணம் முழுதும் நிம்மதியாக!
RASIGAI!



கற்பூர வாசமாக !!


நினைவில் நிறைத்து
கனவில் கலந்து
கற்பனையில் மிதந்து
கற்பூர வாசமாக
காற்றோடு காற்றாக
கலந்து விட்டாள்!!!!!!!!!
RASIGAI!

காத்திருப்பு!


கண்களை பாதுகாப்பேன்
கவிதை பாடி காதலிக்க!
மௌனமாக தவமிருப்பேன்
மாலையிட்டு மார்பில் சாய !
RASIGAI!

பூஞ்சோலை!


பைத்தியமே!
ஒரு மாலை போதுமா?
என் கைதான்
உனக்கு இனி மாலை!
என் மார்பில்
நீ ஒரு பூஞ்சோலை!
RASIGAI!

தோழி!


போர்வை தந்தவனை
அருகில் கண்டாயா?
கண்பூக்க காத்திருப்பதை
அவனிடம் சொன்னாயா?
RASIGAI!


வற்றாத அருவி!


விண்ணும் மண்ணும்
போற்றும் வண்ணம்
அன்பில் நீயும் நானும்!
வற்றாத அருவியாக!
RASIGAI!

லீலை!


மாதவா என்ன இது ?
மாராப்பை விடுடா!
மான்கள் பார்கின்றன!
RASIGAI!

நீல மகளா? நில மகளா?


நீல வான தேவதையே!
நிலதிற்க்கு ஏன் வந்தாய்?
தேவன் அழைக்கிறான்!
தேவதையே வந்து விடு!
முழு நிலவே சென்று விடு!
பறப்பதை விட்டேன்!
பாரிலே தங்கிட்டேன்!
இறக்கையை எடுத்து செல்!
இறங்கிவிட்டேன் பாரினுள்!
RASIGAI!

இரட்ட ஜிட்டு!


நிலவு உருண்டையையே
உடைத்து கோபமா?
என்னாடி இரட்ட ஜிட்டு!
பின்னாடி என் இறக்கை பட்டு!
வந்து அமரடி என் சிட்டு!
போகலாம் வானில் ஊர்கோலம்!
RASIGAI!

அசதி இல்லை!


அசதியில்லாமலே நான்
அசையாத மரமாக வேராக
மறுத்துப்போய் மரமானேன்!
பறக்கட்டும் என் இலை கிளைகள்
விண்ணில் பொன்னிறமாக சிரிக்கட்டும்!
தன்னுள் தனக்கென வாழட்டும்!
RASIGAI!

வெண் நிலவே சிவந்ததடி!


நிலா பெண்ணே!
மேகத்தில் மேடை அமைத்து
தென்னகீற்று இசையுடனே
நடனமாடும் பெண் நிலவே!
வெண் நிலவே சிவந்ததடி
உன்னை கண்டு வெட்கத்தில்
யாரடி இவன் உன் அருகில் ?
நிலத்தில் இருந்து வந்தவனா?
உன்னை எடுத்து செல்வானா?
RASIGAI!

நெஞ்சில் ஊஞ்சலாடும் நிலவு!


உறங்கினாலும்
உறங்காத கனவு!
விழித்தும் மயங்கி
விழும் நினைவு!
RASIGAI!

கனவுகள் கற்பனைகள்!


வான் மேகம் முத்தமிடம்
விருட்சிகம் கொஞ்சி பேசும்
அழகிய அன்னங்கள்
அன்பு சின்னமாகும்!
காதலர்கள் கனவுகளிலும்
கற்பனைகளிலும் மட்டுமே!
RASIGAI!

நிலவின் ஆசிர்வாதம் !!


வானமும் சிவந்து வாழ்த்தியது
நிலவும் மயங்கி வாழ்த்தியது
நாம் என்றும் ஒன்றாக
இதயம் என்றும் ஒன்றாக!!
RASIGAI!

நிலவை பார்த்து!


வெண் நிஜமாக
உன் நினைவு!
தொடர் நிழலாக
என் கனவு!
நிலவை பார்த்து
நிழலாக நிஜமாக
நீயும் நானும்!
RASIGAI!

நிஜம்!


உண்மை ஊமையாகிறது
உதட்டில் ஒட்டிய இதயத்தால்!
RASIGAI!

Friday, September 9, 2011

மஞ்சள் மோகினி!


பாலைவன மேகமவள்!
காற்றோடுதான் கலந்தாள்!
தென்றலாக வலம் வருவாள்!
தெவிட்டாத இதம் தருவாள்
RASIGAI!

சூழ் நிலைகைதி!


கந்தர்வமணம்
கவலை விடு!
காத்திருக்க வைத்தேன்
மன்னித்துவிடு!
RASIGAI!



நீயே! நீயே!


இனி ஒன்றும் கூறாதே!
வென்றதும் நீயே!
சென்றதும் நீயே!
இனி ஒன்றும் கூறாதே!
RASIGAI!